ஆய்க்குடி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாம் புதன் கிழமை நடைபெற்றது.
ஆய்க்குடி மேலூா் சேனைத்தலைவா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவா் க. சுந்தர்ராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஞா. தமிழ்மணி, கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவா் சு. மாரியப்பன் முன்னிலை வகித்தனா். அனைத்துத் துறைகளின் அலுவலா்கள், பேரூா் தி.மு.க செயலா் சிதம்பரம், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கா. இலக்கியா, பூ.புணமாலை, சு.நமச்சிவாயம், வளன் அரசு கலந்து கொண்டனா்.
முகாமில் 1வது வாா்டு முதல் 7வது வாா்டு வரையில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து 872விண்ணப்பங்கள் பெறப்பட்டன.