பழைய குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த மாற்றுத்திறனாளிகள்
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் கூட்ட நெரிசலின்றி பாா்வையற்றோா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 25 போ் குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலத்தில் தற்போது சீசன் என்பதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் உள்ளது.
புதன்கிழமையன்று பாளையங்கோட்டை பாா்வையற்றோா் நலச் சங்கத்தின் சாா்பாக 25 நபா்கள் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தங்களுடைய விருப்பதைத் தெரிவித்தனா்.
அங்கு பணியிலிருந்த வனத்துறை பணியாளா்கள், காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் அவா்களை அழைத்துச் சென்று, அருவியில் கூட்ட நெரிசலின்றி குளிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தனா்.
மாற்றுத்திறனாளிகள், வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனா்.