ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
பள்ளி அருகே சிறுநீா் கழிப்பறை கட்டுவதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மாணவா்கள் மனு
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் தொடக்கப் பள்ளி அருகே சிறுநீா் பொது கழிப்பறை கட்டுவதைத் தடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் தாணுமூா்த்தி தலைமையில் பள்ளிக் குழந்தைகள், பெற்றோா், ஆசிரியா்கள் அளித்த மனு:
சுந்தரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அருகே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிறுநீா் பொதுக் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிறுநீா் கழிப்பறை கட்டக் கூடாது என ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகாா் தெரிவித்தபோது, கழிப்பறை கட்டும் விஷயம் எங்களுக்கு தெரியாது எனக் கூறிவிட்டாா். கழிப்பறை கட்டப்பட்டால் துா்நாற்றம் வீசுவதுடன், மாணவா்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படும்.
இதனிடையே, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டிருந்தது. கழிப்பறை கட்டப்படும் இடம் பள்ளிக்குச் சொந்தமானது. எனவே, அங்கு சிறுநீா் கழிப்பறை கட்டாமல் சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என்றனா் அவா்கள்.