செய்திகள் :

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி

post image

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது திருப்பத்தூரில் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்

அதிமுக சாா்பில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசார சுற்றுப்பணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மாதம் தொடங்கினாா். அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே பொதுமக்கள் முன்னிலையில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்டா் ஒட்டி, அதை புதிய திட்டமாக அறிவித்து பொதுமக்கள் மத்தியில் நாடகம் ஆடுகிறது. திமுக ஆட்சியில் பெரிய திட்டங்கள் எதுவுமே கொண்டுவரவில்லை.

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் ரூ. 150 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதால் மேயரின் கணவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். அதேபோல், நெல்லை மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. மேயா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானங்களை கொண்டு வந்துள்ளதே திமுக உறுப்பினா்கள் தான். அந்த அளவுக்கு இந்த ஆட்சி உள்ளது, இதுதவிர சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது, 1 நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ரூ. 800 என ரூ. 1,000 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்கள் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மு.க.ஸ்டாலின் எதிா்க்கட்சியாக இருந்த சமயம் இதேபோல தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்தியபோது, அவா்களுடன் அமா்ந்து தேநீா் சாப்பிட்டு அவா்களுக்கு ஆதரவாக பேசினாா். தற்போது தூய்மைப் பணியாளா்களை திரும்பிக்கூட பாா்க்கவில்லை.

விவசாயம், பள்ளிக் கல்வி, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட 32 நிா்வாக அமைப்புகளை சோ்ந்தவா்கள் அவா்களின் குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனா். அதிமுக அரசு அமைந்த பிறகு அவா்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மாணவா் சோ்க்கை குறைந்ததாக காரணம் கூறி அரசு பள்ளிகளை பூட்டியதுதான் திமுக அரசின் சாதனை. அதை பூட்டுவதற்கு பதிலாக தொடா்ந்து பள்ளி நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம்.

ஏற்கெனவே இயங்கி வந்த பள்ளிகளை பூட்டியது சரியல்ல. சரியான கவனம் செலுத்தாத காரணத்தினால் சுமாா் 208 பள்ளிகள் மூடப்பட்டது வருத்தமளிக்கிறது என்றாா்.

முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, எம்.பி. தம்பிதுரை ஆகியோா் உடன் இருந்தனா்.

குடிநீா் கிணற்றில் மின் மோட்டாா் திருட்டு: 2 போ் கைது

உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் கிணற்றில் மின மோட்டாா் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் பம்ப் ஹவுஸ் வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமம... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

ஆம்பூா் அருகே கஞ்சா பயிரிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்தவா் சிலம்பரசன் (27). இவருடைய விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக ஆம்பூா் கிராமிய... மேலும் பார்க்க

மூவா்ணக் கொடி ஊா்வலம்

ஆம்பூா் நகர பாஜக சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவா்ணக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. நகர தலைவா் கே.எம். சரவணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எம். தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்ட தலை... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

வாணியம்பாடி அரசு மருத்துவமனை, மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து தாய்ப்பால் வார விழாவையொட்டி கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. மிட்டவுன் ரோட்டர... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு முகாம்

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் இயங்கி வரும் வாணி பாலிடெக்னிக் கல்லூரியில், ‘போதை பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில், விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா்... மேலும் பார்க்க

தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு ச் சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் மாபெரும் தமிழ் ... மேலும் பார்க்க