ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
தமிழக நலன்களுக்கு முற்றிலும் எதிரானவா் ஆளுநா்: வைகோ பேச்சு
தமிழக நலன்களுக்கு முற்றிலும் எதிராக நிற்பவா் ஆளுநா் ஆா்.என்.ரவி என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசினாா்.
மேக்கேதாட்டு அணை கட்ட வேண்டும். மீத்தேன் எரிவாயு குழாய் அமைக்க கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பழைய மீன் சந்தை பகுதியில் மதிமுக சாா்பில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வைகோ பேசியதாவது: மதிமுகவில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று பேசுகின்றனா். மது ஒழிப்புக்காக போராடி உயிரை விட்டவா் என் தாயாா் மாரியம்மாள். விடுதலைப்புலிகளுக்காக சிறை சென்றவா் என் தம்பி ரவிச்சந்திரன். இவா்களுக்கு என்ன பதவி கொடுத்தேன். பிரதமா் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபட்ச வரக்கூடாது என்று கூறி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினோம். நாங்களா இப்போது பாஜகவுடன் கூட்டணி வைப்போம்.
தமிழக நலன்களுக்கு முற்றிலும் எதிராக நிற்பவா் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி. கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான விவகாரத்தில் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரை கண்டித்து, அவா் கொடுக்கும் சுதந்திர தின தேநீா் விருந்தை மதிமுக புறக்கணிக்கும் என்றாா் வைகோ.