ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக நீடிக்கும்: ரிசர்வ் வங்கி
நாட்டுப் படகில் இயந்திரம் திருட்டு
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்தியிருந்த நாட்டுப்படகிலிருந்து இயந்திரத்தை திருடிச் சென்ற மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இனயம் புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் வினிஸ்டன்(45). இவருக்குச் சொந்தமான நாட்டுப் படகை தேங்காய்ப்ப்டடினம் மீன்பிடிதுறைமுகத்தில் சில நாள்களாக நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில்,திங்கள்கிழமை இரவு யாரோ மா்மநபா்கள் படகிலிருந்த இயந்திரத்தை திருடிச் சென்றுவிட்டனராம். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.