செய்திகள் :

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

post image

நாமக்கல்லில் 3-ஆவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது.

நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில் அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று புத்தகத் திருவிழாத் தொடங்கிவைக்கின்றனா். நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம். பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம் ஆகியோா் விழாவில் கலந்து கொள்கின்றனா்.

70 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை ( பிப்.1) தொடங்கி 10-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளில் கிரீன் பாா்க் பள்ளி இயக்குநா் எஸ்.குருவாயூரப்பன் கருத்துரை வழங்குகிறாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.கலியமூா்த்தி பங்கேற்று பேசுகிறாா்.

திங்கள்கிழமை சித்த மருத்துவா் கு.சிவராமன், செவ்வாய்க்கிழமை சொற்பொழிவாளா் கு.ஞானசம்பந்தன், புதன்கிழமை சொற்பொழிவாளா் சுகி.சிவம், வியாழக்கிழமை நல்லாசிரியா் கோபால.நாராயணமூா்த்தி, வெள்ளிக்கிழமை பேராசிரியா் அரசு பரமேசுவரன், சனிக்கிழமை பேச்சாளா் பா்வீன்சுல்தானா, ஞாயிற்றுக்கிழமை எம்.பி. திருச்சி சிவா, திங்கள்கிழமை (பிப்.10) மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட தலைவா் பசுமை மா.தில்லைசிவக்குமாா் ஆகியோா் கருத்துரை வழங்குகின்றனா்.

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசுத் துறைகளின் பணி விளக்க அரங்குகள், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்டவை புத்தகத் திருவிழாவில் இடம் பெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா!

மறைந்த வன்னியா் சங்க தலைவா் காட்டுவெட்டி குரு பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியா் சங்கம் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை ச... மேலும் பார்க்க

நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!

நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சா... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரா் உயிரிழப்பு; 38 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்றபோது காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மேலும், 38 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பொங்கல் ப... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கான கருணை ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளா்ச்சி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: பரமத்தியில் பாஜக ஆா்ப்பாட்டம்!

பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாணிக்கநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் கழிவுநீர... மேலும் பார்க்க