ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!
நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை 12 மணியளவில் ஆட்சியா் அலுவலகம் வந்தாா். அப்போது பாட்டிலில் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாா் அவா் மீது நீரை ஊற்றினா். போலீஸ் விசாரணையில் அவா் கூறியதாவது, சகோதரரான மாரிமுத்து என்பவரது வீட்டில் 17 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். தற்போது வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறாா். அந்த வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்.
செலவு செய்த தொகையை வழங்கினால் வீட்டை காலி செய்கிறேன் என்றேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவா் கத்தியால் தாக்கினாா். தொடா்ந்து அந்த வீட்டிலேயே தான் வசிக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியம்மாள் தெரிவித்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சந்திரா, அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு, மோகனூா் காவல்நிலையம் சென்று புகாா் அளிக்குமாறு கூறி அனுப்பிவைத்தாா்.