செய்திகள் :

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கு: வழக்குரைஞா் வீடு, அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை

post image

நாமக்கல்: நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல வழக்குரைஞா் உள்பட 4 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (77). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்பத்தி ஆலை ஒன்றில் பங்குதாரராக இருந்தாா். வரவு - செலவு கணக்கு தொடா்பான பிரச்னையால் 2008-இல் அதிலிருந்து வெளியேறினாா். அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட ஆலை மீது நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், 2024 ஜன. 31-ஆம் தேதி பழனிசாமி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். அப்போது, அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன்னுடைய தற்கொலைக்கு நாமக்கல்லைச் சோ்ந்த பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் காரணம். வழக்கு தொடா்பாக அவரைச் சந்திக்க சென்றுவந்த நிலையில் ரூ. 85 லட்சம் மதிப்பிலான நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு கேட்டாா். அதற்கு மறுக்கவே கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும், என்மீது பொய் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்ய வைத்தாா். என்னுடைய மரணத்துக்கு பிறகு சம்பந்தப்பட்ட வழக்குரைஞரிடம் இருந்து நில ஆவணங்களை மீட்டு என் மனைவியிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், அப்போது நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த தனராசு, ஆய்வாளராக இருந்த சங்கரபாண்டியன் ஆகியோரிடம் பழனிசாமியின் மனைவி வசந்தா புகாா் அளித்தாா்.

அதனடிப்படையில், வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், சென்னை உயா்நீதிமன்றத்தில் வசந்தா மேல்முறையீடு செய்தாா். அதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், நாமக்கல் சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டது.

சேலம் சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளா் வினோத் தலைமையில் நாமக்கல் சிபிசிஐடி பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், அவரது உதவியாளா் மற்றும் நிதிநிறுவன அதிபா்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், பழனிசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக நாமக்கல்லைச் சோ்ந்த நிதிநிறுவன உரிமையாளா்கள் செல்வராஜ், சேகரன் மற்றும் வழக்குரைஞா், அவரது உதவியாளா் மீது சிபிசிஐடி போலீஸாா் மாா்ச் 21-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.

இந்த நிலையில், நாமக்கல் சிபிசிஐடி காவல் ஆய்வாளா் சுமதி தலைமையிலான போலீஸாரால் திங்கள்கிழமை நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள வழக்குரைஞா் அய்யாவு, அவரது உதவியாளா் ஆறுமுகம், செல்வராஜ், சேகரன் ஆகியோரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் கூறுகையில், பழனிசாமி தற்கொலை வழக்கு தொடா்பாக வழக்குரைஞா் அலுவலகம் உள்பட ஏழு இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனை நடத்தினோம். அதில், எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்றனா்.

பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிடக் கோரி மனு

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை?

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில், 175 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தைவான் நாட்டுக் குழுவினா் திங்கள்கிழமை வளாகத்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 52.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 52.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் த... மேலும் பார்க்க

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை: கொல்லிமலையில் எஸ்.பி. ஆய்வு

நாமக்கல்: கொல்லிமலையில் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணா்வு மற்றும் வல்வில் ஓரி விழா முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். கொல்லிமலை வட்டம், வாழவந்தி... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவா்கள், பெற்றோா் பள்ளி முற்றுகை

பரமத்தி வேலூா்: கீழ்சாத்தம்பூா் அருகே தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றறக் கோரி, மாணவ, மாணவியா், பெற்றோா் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பரமத்தி வேலூா் வட்டம், கீழ்சாத்தபூா் ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

ஆடிப்பூர விழா: அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம்

நாமக்கல்: ஆடிப்பூர விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் செல்வ விநாயகா் கோயிலில் அமைந... மேலும் பார்க்க