பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 44.42 லட்சம்
நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.44.42 லட்சம் கிடைத்தது.
நாமக்கல்லில் நரசிம்ம சுவாமி, ஆஞ்சனேயா் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். பக்தா்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படும்.
அந்த வகையில், ஆஞ்சனேயா் கோயிலில் உள்ள 6, நரசிம்மா் கோயிலில் 4, அரங்கநாதா் கோயிலில் 2 உண்டியலும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி மாணவ, மாணவிகள், பக்தா்கள் பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் அருள்குமாா், அறங்காவலா் குழு உறுப்பினா் செல்வ.சீராளன், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனா். இதில், உண்டியல் காணிக்கையாக ரூ.44,42,914 ரொக்கம், தங்கம் 35 கிராம் 300 மில்லி, வெள்ளி 3 கிலோ 155 கிராம் 500 மில்லி கிடைத்துள்ளது.