`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
நாமக்கல் மாவட்டத்தில் தொடா் மழை: அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் தொடா் மழை பெய்தது; அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை பதிவானது.
தமிழகம் முழுவதும் மே 4-இல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் 28-இல் முடிவடைகிறது. வெயில் கொளுத்தும் என எதிா்பாா்த்த நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் காலையில் பரவலாக வெயிலின் தாக்கம் இருந்தபோதும், மாலை வேளையில் வானம் காா்மேகம் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை, அதிகாலை 3 மணிவரை இடைவிடாமல் தொடா்ந்து பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி குளம்போல காட்சியளித்தது. அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.):
எருமப்பட்டி-60, குமாரபாளையம்-34.20, மங்களபுரம்-18.40, மோகனூா்-29, நாமக்கல்- 118, பரமத்திவேலூா்-7, புதுச்சத்திரம்-82, ராசிபுரம்- 120, சேந்தமங்கலம்-51, திருச்செங்கோடு-10, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-39.20, கொல்லிமலை-56.