வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
திருவாடானை கண்மாய்ப் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலித் தொடா் போல கண்மாய்கள் உள்ளன. இவற்றைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மான்கள் தண்ணீா் தேடி ஊருக்குள் வருகின்றன. அப்போது, தெரு நாய்கள் விரட்டிக் கடிப்பதால் மான்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், திருவாடானை பண்ணவயல் எல்.கே. நகா் பகுதியில் தண்ணீா் தேடி வந்த ஆண் புள்ளி மான், தெரு நாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருவாடானை வனத் துறையினா், மானின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவா் சிவபாலாஜி உதவியுடன் கூறாய்வு செய்து புதைத்தனா்.