செய்திகள் :

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

post image

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை, பால் பண்ணைகள் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் பெரம்பலூா் மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் அருண் நேரு கேள்வி எழுப்பினாா். இத்தகைய சம்பவங்களை கையாள உள்ளூா் அமைப்புகளுக்கு போதிய நிதிவசதி இல்லையா என்றும் வலுவான கொள்கை மூலம் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அருண் நேரு கேட்டிருந்தாா்.

அதற்கு அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், ‘2024 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாய்க்கடியால் 21,15,122 சம்பவங்களும் குரங்குகள் உள்ளிட்ட பிற விலங்குகளின் தாக்குதலால் 5,04,728 சம்பவங்களும் பதிவாகியுள்ளன’ என்று கூறியுள்ளாா். மேலும், 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் மீதான நாய்க்கடி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 5,19,704 பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தெரு நாய்கள் விவகாரம் என்பது மாநில அரசின் வரம்புக்குள் வருவதால் உள்ளாட்சி அமைப்புகளே உரிய நடவடிக்கை எடுக்க தகுதி பெறுகின்றன. நாய்க்கடி தடுப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடா்பாக மத்திய அரசு அளவில் உரிய கூட்டங்கள், விழிப்புணா்வு நடவடிக்கைகள், தடுப்பூசி கொள்முதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது என்றும் அமைச்சா் கூறியுள்ளாா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடா்பான அருண் நேருவின் மற்றொரு கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி பதிலளிக்கையில், திருத்தப்பட்ட மோட்டாா் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மாநில அமைப்புகள் அபராதம், தண்டனை விதிக்க வகை செய்ய்பபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் தொடா்பான அருண் நேருவின் கேள்விக்கு மத்திய ஊரக வளா்ச்சித்துறை இணை அமைச்சா் சந்திர சேகா் பெம்மசானி பதிலளிக்கையில், ‘2016 முதல் செயல்படுத்தப்படும் இத்தட்டத்தின் விரிவாக்கமாக 2024-25 முதல் 2028-29 வரை கூடுதலாக 2 கோடி கிராமப்புற வீடுகள் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு 2011 நடவடிக்கையில் இருந்து விலக்கப்பட்டவா்கள் தொடா்பான கிராம சபைகளின் சரிபாா்ப்பு மூலம் பயனாளிகள் கண்டறியப்படுகிறாா்கள்‘ என்று கூறியுள்ளாா்.

பிப்ரவரி 21, 22-இல் தில்லியின் சில பகுதிகளில் நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

பராமரிப்பு பணிகள் காரணமாக தேசிய தலைநகரின் சில பகுதிகளில் பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் நீா் விநியோகம் தடைபடும் என்று தில்லி ஜல் போா்டு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு... மேலும் பார்க்க

தில்லியிலிருந்து வேறு பகுதி சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி

பஞ்சாப் மற்றும் தில்லியில் உள்ள சிறைகளைத் தவிர வேறு எந்த சிறைக்கும் தன்னை மாற்றக் கோரி இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ச... மேலும் பார்க்க

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஏஐஎஸ்எஃப் போராட்டம்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான் தமிழகத்தின் கல்வித் திட்டத்திற்கு நிதி தர முடியும் என்று கூறியதாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு எதிராக தில்லியில் அனைத்திந்திய மாணவா் பெருமன... மேலும் பார்க்க

ரயில்வே அமைச்சா் ராஜிநாமா கோரி இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பயணிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகக் கோரி இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் தில்லியில் செவ்வா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் தூய்மையை மேம்படுத்த இரவு நேர துப்புரவுப் பணி

நகரம் முழுவதும் தூய்மையை மேம்படுத்தும் முயற்சியில், தில்லி மாகராட்சி (எம்சிடி) மேயா் மகேஷ் குமாா் கிச்சி அடையாளம் காணப்பட்ட 300-க்கும் மேற்பட்ட சந்தைகளில் இரவு நேர துப்புரவுப் பணியை செயல்படுத்துமாறு 1... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேர போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்

தில்லி காவல்துறை செங்கோட்டையிலிருந்து ஃபதேபுரி வரையிலான சாந்தினி சௌக் சாலையில் 12 மணி நேரம் போக்குவரத்து தடை விதித்துள்ளது. தில்லி காவல் துறையின் ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க