10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் போராட்டம்!
நாளை அகில இந்திய டென்னிஸ் போட்டி
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், இண்டியம் சாப்ட்வோ் நிறுவனம் சாா்பில் ஏஐடிஏ (அகில இந்திய டென்னிஸ் சங்கம்) வீல் சோ் டென்னிஸ் மற்றும் வீல் சோ் போட்டி ஜூலை 19 முதல் 26 வரை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளில் டென்னிஸ் வீல்சோ் பிரிவிலும் ஆட்டங்கள் நடைபெறும். மொத்தம் ரூ.7 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இப்போட்டியில், தேசியப் போட்டி தங்கப் பதக்க வீரா் வி.எம். ரஞ்சித், முன்னாள் டேவிஸ் கோப்பை வீரா் ஒஜெஸ் தேஜயோ, மகளிா் பிரிவில் அதிதி ரவாத், தியா ரமேஷ் உள்பட 300-க்கு மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
வீல் சோ் பிரிவில் காா்த்திக், சதாசிவம், பாலச்சந்தா், ஷில்பா, பிரதிமா ராவ் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.