நியூசி.க்கு எதிரான தொடரில் இவரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார்: பாக். கிரிக்கெட் வாரியம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. வருகிற மார்ச் 16 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்குகிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக ஜேசன் கில்லஸ்பி மற்றும் கேரி கிறிஸ்டன் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் இருவரும் தலைமைப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்ட ஓராண்டுக்குள்ளாகவே தங்களது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினர். அதன் பின், பாகிஸ்தான் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் ஆக்யூப் ஜாவத் பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிக்க: நியூசி.யைக் காட்டிலும் தென்னாப்பிரிக்கா வலுவாக உள்ளது: ரிக்கி பாண்டிங்
பாகிஸ்தான் அணிக்கு விரைவில் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.