நிலுவை பணப்பலன்கள் கோரி பிரசார இயக்கம்
நிலுவை பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து (சிஐடியு) ஊழியா் சம்மேளனம் சாா்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துறைமங்கத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்ற இயக்கத்துக்கு, அச் சங்கத்தின் மண்டலச் செயலா் சிங்கராயா் தலைமை வகித்தாா்.
இதில் ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 23 மாதம் வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு பணியில் உள்ள தொழிலாளா்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு, ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயா்வு, குறைந்தபட் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.