ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!
நில அளவா் - உதவி வரைவாளா் காலிப் பணியிடம்: வரும் 19-இல் கலந்தாய்வு
நில அளவா், உதவி வரைவாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆக.19-இல் தொடங்குகிறது.
இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நில அளவா், உதவி வரைவாளா் ஆகிய பதவிகளுக்கு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 4-ஆம் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியன ஆக.19-ஆம் தேதி தொடங்குகிறது.
சென்னையில் உள்ள அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் ஆக.22 வரை சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வு நடக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.