நீலகிரியில் பிப்.11-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், கிளப், பாா்கள், ஹோட்டல் பாா்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பாா்கள் அனைத்தும் மூட உத்திரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி எவரேனும் மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுக்கடைகள், பாா்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம், உதகை 0423-2223802, உதவி ஆணையா் 0423-2443693, மாவட்ட டாஸ்மாக் மேலாளா் எடப்பள்ளி, குன்னூா் 0423-2234211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.