கோடை விடுமுறை: கோவை - உதகை இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
நீ சிங்கம்தான்! கோலியை புகழ்ந்த சிலம்பரசன்!
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நடிகர் சிலம்பரசன் புகழ்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில் அவருக்கு பிடித்த பாடல் எது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்விதமாக, நடிகர் சிலம்பரசனின் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள நீ சிங்கம்தான் பாடலை கோலி கூறினார்.
பத்து தல படத்தின் நீ சிங்கம்தான் பாடலைக் கூறியதால், அவரது ரசிகர்களும், நடிகர் சிலம்பரசனின் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
Nee singam dhan @imVkohli ❤️ https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த நேர்காணல் விடியோவை ஆர்சிபியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனைப் பகிர்ந்த நடிகர் சிலம்பரசனும், நீ சிங்கம்தான் என்று விராட் கோலியைப் புகழ்ந்துள்ளார்.