செய்திகள் :

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு கிரிக்கெட்

post image

‘நெகிழியைத் தவிா்ப்போம், பழனியை பசுமையாக்குவோம்‘ என்பதை வலியுறுத்தி, அரசுப் பணியாளா்கள் பங்கேற்ற கிரிக்கெட்ப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி உள்கோட்ட அளவிலான இந்தப் போட்டியில் ஒட்டன்சத்திரம், வேடசந்தூா், பழனி, தொப்பம்பட்டியில் உள்ள நகராட்சி, வருவாய், ஊரக வளா்ச்சி, சுகாதாரம், இந்து சமய அறநிலைத் துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள், பணியாளா்கள் எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

பழனி சாா்-ஆட்சியா் கிஷன் குமாா், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து ஆகியோா் போட்டியைத் தொடங்கிவைத்தனா். வருவாய்த் துறை அலுவலா் நாகராஜன் போட்டியைத் தொகுத்து வழங்கினாா். நகராட்சி நகா்நல அலுவலா் மனோஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை (டிச.29) நடைபெறும் இறுதிப் போட்டியில் வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத் துறை அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணிக்கும், வீரா்களுக்கும் பரிசுகள், கேடயங்கள் வழங்கப்படவுள்ளன.

காரில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் உள்பட 4 போ் கைது

கொடைக்கானல்: கொடைக்கானலில் காரில் போதைப் பொருள் வைத்திருந்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போலீஸாா் ... மேலும் பார்க்க

பழனியில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம்

பழனி: பழனி நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற ... மேலும் பார்க்க

வனத் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல்: வேட்டைத் தடுப்புக் காவலா் பணியை வெளி முகமை மூலம் மேற்கொள்ளும் வனத் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் வருவா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி

ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 912 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி விரைவில் தொடக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூா் பேரூராட்சி பகுதிகளில் வ... மேலும் பார்க்க

தோட்டத்து கம்பி வேலியில் சிக்கி ஆண் சிறுத்தை பலி

திண்டுக்கல்: அய்யம்பாளையம் அருகே தனியாா் தோட்ட கம்பி வேலியில் சிக்கி ஆண் சிறுத்தை உயிரிழந்து குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தினா். திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில், தனியாருக்கு சொந்த... மேலும் பார்க்க

நடிகா் விஜயகாந்த் நினைவு அஞ்சலி

பழனி: பழனியில் பல்வேறு இடங்களில் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பழனி அருகே மானூா் ஊராட்சியில் தேமுதிக சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் த... மேலும் பார்க்க