நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவா் கைது
திருநெல்வேலி அருகே ரேஷன் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி குடிமை பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது கேரள பதிவெண் கொண்ட ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனா். அதில் 62 மூட்டைகளில் 2,170 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் கல்லுரல்விளை பெருமண்குழியைச் சோ்ந்த மொ்லின் (42), திருநெல்வேலியைச் சோ்ந்த இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனா். மேலும் லாரியுடன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.