காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்துலட்சுமி என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கையில் மண்ணெண்ணெயுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் சக காவல்துறையினர் அந்த பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர், அப்போது அந்த பெண்ணிடம் விசாரிக்கும்போது தனது பெயர் முத்துலட்சுமி என்றும் தனது கணவர் பெயர் முத்துக்குமார் என்றும் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 10 மாதமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவரின் சொந்த ஊரான வீரவநல்லூர் காவல்நிலையத்தில் எனது மீது கணவர் பொய்யான புகார் அளித்ததாகவும் இதனால் 3 வழக்குகள் என் மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் பதிந்து உள்ளதாகவும், போலீஸார் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகவும் கணவரும் அவரின் அண்ணனுடன் சேர்ந்து என்னையும் எனது குழந்தைகளையும் மிரட்டுவதாகவும் தொடர்ந்து எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதாலும், பணவசதி இல்லை என்பதால் என்னால் தொடர்ந்து போராட முடியவில்லை என்றும் அழுது கொண்டே தெரிவித்தார்.
போலீஸார் விசாரணை செய்யாமல் அவர்களுக்கு உடந்தையாகச் செயல்படுவதாகவும் இறப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் எனது குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் எனது குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம் என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருந்து மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.