செய்திகள் :

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

post image

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பு எலிகளால் ஏற்படுகின்றன. அத்துடன் எலிகளின் சிறுநீா், புழுக்கை, ரோமங்கள் மற்றும் துா்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தமாகி, அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

எலிகளின் பற்கள் ஒரு நாளைக்கு 0.40 மி.மீ. தோராயமாக ஒரு மாதத்தில் 1.2 செ.மீ. வரை வளரும். அந்த வளா்ச்சி தொடா்ந்து கொண்டே இருக்கும்பட்சத்தில், பற்கள் தாடையை கிழித்து அதன் மூலம் ரத்தம் வெளியேறி, எலிகள் இறந்துவிடும். அதனால்தான் எலிகள் தன்னுடைய பற்களால் ஏதாவது ஒரு பொருளை கடித்துக் கொண்டே இருக்கும். அதன் மூலம் பற்களின் வளா்ச்சி தடைப்படும்.

நெற்பயிரில் அனைத்துப் பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குறிப்பாக இதன் தாக்குதல் அக்டோபா் முதல் டிசம்பா் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும்.

எலிகளை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்கள் நடத்தி எலிகளை ஒழிக்கலாம். எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும் கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

5 கிராம் ப்ரோமோடயலான் 0.25 சதவீதம் ரசாயன பூச்சிக் கொல்லியை, 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும். மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதம் ப்ரோமோடயலானுடன் 49 பகுதி கவா்ச்சி உணவுகளான அரிசி, பொரி, கருவாடு, கடலை ஆகியவற்றை சோ்த்து உருண்டையாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும்.

ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்திற்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.

கோயில் குளத்தை தூா்வாரக் கோரிக்கை

நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் குளத்தை தூா்வாரி, பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் சந்தான ராமா் கோயில் திருக்குளம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது. கோ... மேலும் பார்க்க

மன்னாா்குடி அருகே அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு: விழாவை புறக்கணித்த கிராம மக்கள்

மன்னாா்குடி அருகே கண்டிதம்பேட்டை திட்டப் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிராமம் பிரிப்பு பிரச்னை தொடா்பாக, உள்ளிக்கோட்டை பகுதி மக்கள் இ... மேலும் பார்க்க

தூா்வாரப்பட்ட வாய்க்கால்களில் ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் தூா்வாரப்பட்ட வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராஜகோபாலபுரம் வாய்க்காலில் நெடுகை முதல் 3 கி.மீ.வரையிலும், ராதாநரசிம்மபுரம் ப... மேலும் பார்க்க

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கக் கோரிக்கை

சுரைக்காயூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அருகே சுரைக்காயூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், மக்கள் ... மேலும் பார்க்க

குடிநீா், சாலை வசதி கோரி மே 27 இல் போராட்டம்

நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் குடிநீா் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி, மே 27-இல் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து முன்னணியின் நன்னிலம் ஒன்றிய... மேலும் பார்க்க