மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!
``நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." - சிவ்ராஜ் சிங் பேச்சு
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையொட்டி, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா.
இது குறித்து தற்போது இந்திய மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கியுள்ளது. இது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மக்களிடம் பேசியதாவது,
"1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர் நேரு கையெழுத்திடும் போது, நிபுணர்கள் கடுமையாக எச்சரித்தனர். இருந்தும், அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தம் மூலம் தண்ணீர் மட்டும் கொடுத்தத்தோடு அல்லாமல், பாகிஸ்தானுக்கு 83 கோடி ரூபாயை நேரு வழங்கினார். அந்த 83 கோடி ரூபாயின் தற்போதைய மதிப்பு ரூ.5,500 கோடி.

இந்தப் பணத்தை வைத்து பாகிஸ்தான் சிந்து நதிகளில் உள்ள மேற்கு ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டுப்போகும் கால்வாய்களைக் கட்டினார்கள்.
இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வண்ணம் தான் நாம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கி வருகிறோம். ஆனால், பாகிஸ்தானோ தீவிரவாதிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.
சிந்து நீர் ஒப்பந்தத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளை தெரிவித்தார்.
நேரு பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்து அமைதியை வாங்கினார். ஆனாலும், அது எந்த விதமான அமைதி? நாம் தண்ணீரையும் இழந்தோம், பணத்தையும் இழந்தோம்.
இனி சிந்து நதி நீரை இந்தியாவிற்காகவும், இந்திய விவசாயிகளுக்காகவும் பயன்படுத்துவோம்" என்று பேசியுள்ளார்.
இந்தப் பேச்சு இந்திய அளவில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.