திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு
பக்தர்களே அபிஷேகம் செய்யும் தலம்...
அகத்திய முனிவரின் சீடர் உரோமச மகரிஷி தனக்கு முக்தி வேண்டி, சிவனை வேண்டினார். அவரிடம் கையில் ஒன்பது தாமரைகளைக் கொடுத்த இறைவன், "தாமிரவருணி தொடங்கும் இடத்தில் விட்டு மலர்கள் கரை ஒதுங்கும் இடங்களில் பூஜை செய்து வந்தால் முக்தி கிடைக்கும்' என்று அருளினார். அவ்வாறே பூஜித்து உரோம மகரிஷி முக்தி பெற்றதால், இந்தக் கோயில்கள் "நவ கைலாசங்கள்' எனப் பெயர் பெற்றன. நவக் கிரகங்களும் இந்த ஒன்பது கோயில்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருள்சக்தியைப் பெற்றன.
இவற்றில் எட்டாவது ஸ்தலமாகிய ராஜபதி நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் முற்றிலும்
அழிந்துவிட்டது. "கோவில்பட்டி கைலாஷ் அறக்கட்டளை சார்பில் 2008}இல் பூமிபூஜை செய்யப்பட்டது. பின்னர், கோயில் நிர்மாணிக்கப்பட்டு, 2010 மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நவகைலாயத்தில் கேது வணங்கிய எட்டாவது தலம் இது.
திருமண, புத்திர பாக்கியத்துக்கும், வியாபார, விவசாயம், தொழில் விருத்திக்கும் கைலாசநாதர் அருள்பாலித்து வருவதால் இந்தக் கோயில் "தென்
காளகஸ்தி' என்ற சிறப்புடையது. ராகு, கேது தோஷத்துக்கும், திருமணத்தடைக்கும் பரிகார பூஜை இங்கு நடைபெறுகிறது.
நவக் கிரகங்களுக்குப் பதிலாக, அவற்றின் அதிபதிகளான ஸ்ரீ பாவநாதர், ஸ்ரீஅம்மநாதர் சுவாமி, ஸ்ரீவைத்தியநாதர், ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர், ஸ்ரீஆபத்சகா ஈஸ்வரர், ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர், ஸ்ரீநாகேஸ்வரர், ஸ்ரீகேதீஸ்வரர் லிங்கங்கள் உள்ளன. இவற்றை பக்தர்களே அபிஷேகம் செய்து, கிரக தோஷத்திலிருந்தும் நிவர்த்தி பெறலாம்.
"இங்குள்ள பாலாவி திருக்குளம் இலங்கை கேதீஸ்வரத்திலுள்ள பாலாவி திருக்குளத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து அமைக்கப்பட்டதால், தீர்த்தத்தை உடலில் தெளித்தால் சகல பாவங்களும் நீங்கும். சித்திரை விழாவில் சுவாமி வீதி உலா வருவதை தரிசித்தால் பாவங்கள், துன்பங்கள், நோய்கள், வறுமைகள் நீங்கும். 11 பிரதோஷம் கலந்துகொண்டால் நினைத்த காரியம் நடக்கும். ஸ்ரீகண்ணப்பநாயனார் சந்நிதியில் அபிஷேகம் செய்தால் தம்பதி ஒற்றுமை நிலைக்கும். ஏழு நிலை ராஜகோபுரத்தை தரிசித்தால் மீண்டும் பிறவா இன்பம் பெறலாம்' என்பது ஐதீகம். கோயிலின் சுத்தம் தெய்வீக தன்மையை நாம் நிச்சயம் உணர முடிகிறது.
சிறப்புமிக்க ராஜபதி அருள்மிகு ஸ்ரீசெüந்தரநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலானது திருநெல்வேலி} திருச்செந்தூர் சாலையில் குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் சுமார் 4 கி. மீ. தொலைவில் உள்ளது .
}சொக்கம்பட்டி வி. குமாரமுருகன்