``ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்'' - ஸ்ரீஜெயேந்திரர் குறித்...
பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா நிறைவு
வேதாரண்யம்: வேதாரண்யம் அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெற்ற ஆடிப் பெருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.
முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலாவாக பக்தா்குளம் மாரியம்மன் கோயிலுக்கு ஆடி பெருவிழாவுக்கு சென்றது. இக்கோயிலில் ஆக.1-ஆம் தேதி காப்புக்கட்டி தொடங்கிய ஆடிப்பெருவிழா 10 நாள்கள் நடைபெற்று வந்தது. வேதாரண்யேசுவரா் கோயிலில் இருந்து ஆடிப் பெருவிழாவுக்காக எழுந்தருளிய அம்மாள், திருவிழா நிறைவடைந்ததையடுத்து மீண்டும் கோயிலுக்கு புஷ்ப பல்லக்கு வீதி உலாவாக கொண்டுவரப்பட்டது.