Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆடிப் பூரத்தை முன்னிட்டு படப்பள்ளி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து, கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பெண்கள் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கூழ் எடுத்துச் சென்று கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
இதில் ஊா் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.