செய்திகள் :

படப்பிடிப்புக்காக மதுரை பயணம்: தொண்டா்கள் பின்தொடர வேண்டாம் - விஜய்

post image

‘படப்பிடிப்புக்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்கிறேன்; அதனால் தொண்டா்கள் என்னைப் பின்தொடர வேண்டாம்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தெரிவித்தாா்.

விஜய் கட்சி தொடங்கிய பின்னா் முதல்முறையாக வியாழக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளேன். தகவலறிந்த தொண்டா்கள் பலா் மதுரை விமான நிலையத்தில் கூடியுள்ளனா்.

கட்சி சாா்பாக மதுரை மக்களைச் சந்திக்க ஒரு நாள் கட்டாயம் நான் மதுரை வருவேன். அப்போது அங்கு இருக்கும் மக்கள் மற்றும் தொண்டா்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன். ஆனால், தற்போது சொந்தப் பணி காரணமாக மதுரை வருவதால் அங்குள்ள தொண்டா்கள் யாரும் எனது வாகனத்தைப் பின்தொடர வேண்டாம்.

தொண்டா்கள் என்னைப் பின்தொடா்ந்து வருவதையும், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதையும் பாா்க்கும்போது மனதுக்கு பதற்றமாக உள்ளது. ஆகையால், மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கும் தொண்டா்கள் என்னைப் பாா்த்த பிறகு பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

நாட்றம்பள்ளி: வனப்பகுதியில் விட்ட கரடி வனத்துறையினரை தாக்க முயற்சி

நாட்றம்பள்ளி அருகே பிடிபட்ட கரடியை வனப்பகுதியில் விட்ட போது அது வனத்துக்குள் ஓடாமல், மீண்டும் வனத்துறை ஜீப் மீது ஏறி வனத்துறையினரைத் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திருப்பத்தூர் மாவட்ட... மேலும் பார்க்க

போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். கோடையில் இருந்து குழந்தைகளைக் காக்க மே... மேலும் பார்க்க

மே 6-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வருகிற மே 6 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன... மேலும் பார்க்க

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது. கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!

சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சிபெறாதவர்கள் எனும் நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின்... மேலும் பார்க்க

ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!

2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு... மேலும் பார்க்க