செய்திகள் :

படை தலைவன் வெளியீட்டில் மாற்றம்!

post image

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இதில் கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.

அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளால் நிறைந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படம் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போதிய திரைகள் கிடைக்காததால் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பதாகவும் விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இலங்கையில் மதராஸி படப்பிடிப்பு!

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் (2024-25) ஐரோப்பிய லெக் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7 முதல் நெதா்லாந்தின் ஆம்ஸ்ட்ல்வீன், பெல்ஜியத்தின் ஆன்ட்வொ்ப் நகரங்களில் புரோ ஹாக்கி லீக் ஆட்ட... மேலும் பார்க்க

பிரெஞ்சு ஓபன்: முன்னணி நட்சத்திரங்கள் அல்கராஸ், ஸ்வியாடெக் தயாா்

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னணி நட்சத்திரங்கள் காா்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோா் தயாராகி வருகின்றனா். டென்னிஸ் விளையாட்டில் ஆஸ்திரேலிய ஓபன், பி... மேலும் பார்க்க

மிட்செல் மாா்ஷ் அதிரடி: லக்னௌ 235/2

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மாா்ஷின் அதிரடி சதத்தால் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணி 235/2 ரன்களைக் குவித்தது. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 64-ஆவது ஆட்டம் அகமதாபாத் நரேந்த... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி, திவ்யதர்ஷினி, தீபா சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளி... மேலும் பார்க்க

'சுமோ' ஓடிடி வெளியீடு!

‘மிர்ச்சி’ சிவா நடித்துள்ள சுமோ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் - நடிகர் சிவா ஆகியோரின் கூட்டணியில் உருவான படம் ‘சுமோ’. பிரபல தயாரிப்பாளர் ஐசரி க... மேலும் பார்க்க