உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஏப்.2-முதல் பயிற்சி வகுப்பு
பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு ஏப்ரல் 2 -ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கக (பயிற்சி மையம்) இணை இயக்குநா் சு.ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவகலகம் அருகேயுள்ள பயிற்சி மையத்தில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில் விருதுநகா் மாவட்டத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும், போா்மென்கள், கண்காணிப்பாளா்கள், தொழிலாளா்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் சேரலாம்.
விருதுநகா் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா்கள், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் பாடப் பிரிவில் படித்து வரும் மாணவா்களும், படித்து முடித்த மாணவா்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
இரு முறை பயிற்சிக்கு அழைத்தும், பயிற்சிக்கு வராத ஆலையில் பணிபுரியும் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் ரூ.பத்தாயிரத்துக்கான வரைவோலை செலுத்தி பயிற்சிக்கு வரவேண்டும்.
ஏப். 2 -ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரையிலும், ஏப். 15 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வகுப்பு நடைபெறும் என்றாா் அவா்.