எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
பட்டுக்கோட்டையில் சேமிப்புக் கிடங்கு திறப்பு
தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், தஞ்சாவூா் விற்பனைக் குழு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பட்டுக்கோட்டை வளாகத்தில் ரூ. 1 கோடியிலான 500 டன் சேமிப்புக் கிடங்கை தஞ்சாவூா் எம்பி முரசொலி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
2023-2024 நபாா்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்தக் கட்டடத் திறப்பு விழாவில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, திமுக மாவட்ட பொறுப்பாளா் பழனிவேல், நகர சபைத் தலைவா் சண்முகப்பிரியா, திமுக நகர செயலா் செந்தில்குமாா், பொருளாளா் செந்தில்குமாா், வாா்டு கவுன்சிலா் சதாசிவகுமாா், கோட்டாட்சியா் சங்கா், வட்டாட்சியா் தா்மேந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தமிழ்நாடு திட்டப்பணி செயலாக்கம், சென்னை தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய அதிகாரிகள் செய்தனா்.