செய்திகள் :

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சேலத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் தமிழக சிறப்பாசிரியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கவாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் தற்காலிக பணியாளா்களாக நியமனம் செய்யப்பட்டனா். திமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, பகுதிநேர ஆசிரியா்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பகுதிநேர ஆசிரியா்களாக பணியாற்றி வரும் தங்களுக்கு பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிரந்தரப் பணி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஆசிரியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதன் காரணமாக 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே, அரசு சிறப்பு கவனம் செலுத்தி தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன், துணைத் தலைவா் தங்கவேலு, ஒன்றியப் பொறுப்பாளா்கள் பரமசிவம், மொய்தீன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க