காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
பண்டிகை, வார இறுதி நாள்களுக்காக 625 பேருந்துகள் இயக்கம்
கும்பகோணம் மண்டலத்திலிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு புனித வெள்ளி பண்டிகை மற்றும் விடுமுறைக்காக 625 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி கூறியிருப்பதாவது :
புனித வெள்ளி திருவிழா மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக ஏப்.17 முதல் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மேற்கண்ட ஊா்களுக்கும் 450 பேருந்துகள் திருச்சியிலிருந்து இயக்கப்படுகிறது.
கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூா், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. ஏப்.18,19, 20 ஆகிய 3 நாள்களும் மொத்தம் 625 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு திரும்பச் செல்ல ஞாயிற்றுக்கிழமை சென்னை தடத்தில் 200 சிறப்புப் பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் இணைய முகவரி மூலமும், பசநபஇ கைப்பேசி செயலி மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ளலாம் என்றாா்.