செய்திகள் :

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 28 - ஏப்லல் 3) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

முயற்சிகள் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். வருமானம் உயரும். குடும்பத்தினரின் ஆதரவும் பெருகும். தனலாபம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளைத் தீவிரமாகச் செய்து முடிப்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் அன்பைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் யோகா கற்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பான இடத்தைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்- இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்ப நலம் சீராக இருக்கும். வீடு, நிலம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வெளிநாடு செல்லும் சூழல் நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் தனித்தே வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கௌரவங்களைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்குப் பண வரவு கூடும். பெண்கள் குடும்பத்துடன் ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் பயிற்சி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். போட்டி, பொறாமை இருக்காது. தீயவர்களை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். உடல்நலத்திலும் அக்கறை செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொற்படி நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் புகழையும் பாராட்டையும் பெறுவீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

விருப்பங்கள் படிப்படியாக நிறைவேறும். புது அனுபவங்கள் தேடி வரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தொழிலில் லட்சியத்தை அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு செலவுகள் ஏற்படாது. உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையை காண்பீர்கள். விவசாயிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினருக்கு வெற்றி கிடைக்கும். பெண்கள் குதூகலத்துடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

நெடுநாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உடன்பிறந்தோரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மழலைப் பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பக்குவமாகப் பேசவும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. விவசாயிகள் புதிய குத்தகைகளை தேடாமல் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் அநாவசியச் செலவுகளைக் குறைப்பீர்கள். கலைத் துறையினர் மாற்றுப்பாதையில் கவனம் செலுத்துவீர்கள். பெண்கள் கவனமாக இருக்கவும். மாணவர்களுக்கு உயர்வு உண்டு.

சந்திராஷ்டமம் - மார்ச் 28, 29, 30.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சரியான நேரத்தில் சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்வீர்கள். உடல் நலமும், மனவளமும் மேம்பட யோகா கற்பீர்கள். சுபச் செய்திகள் வந்து சேரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கடினமான பணிகளை அநாயசமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் யோசித்துச் செயல்படவும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் அங்கீகாரம் கிட்டும். கலைத் துறையினர் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணி காப்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 31, ஏப்ரல் 1

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உண்டு. கடினமாக உழைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் தடையின்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு அந்நிய முதலீடு கிடைக்கும். விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளைச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் இலக்குகளை அடைவீர்கள். கலைத் துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்கள்ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஏப்ரல் 2, 3.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். நல்லவர்களின் உறவும், நண்பர்களின் உதவியும் கிட்டும். எடுத்த காரியங்களை முடிப்பீர்கள். அரசு கெடுபிடிகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியின் பலம் வழிநடத்தும். கலைத் துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்களுக்கு ஆத்ம, ஆன்மப் பலங்கள் பெருகும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சுமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். பெற்றோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். தொழிலில் கண்ணியத்தைக் காப்பீர்கள். கடன்கள் திரும்ப வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இழுபறியான பதவி உயர்வு உண்டு. வியாபாரிகள் வழக்கு, கடன் பிரச்னைகள் சாதகமாகும். விவசாயிகள் சக விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு திடீர் பயணம் ஏற்படும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பீர்கள். மாணவர்கள் சக மாணவர்களிடம் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

நண்பர்கள், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். போட்டிகள் தானாக விலகிவிடும். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிரிந்த உறவினர்கள் மீண்டும் இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகள் பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய வருமானம் கிடைக்கும். பெண்கள் பொறுமையைக் கைவிட மாட்டீர்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அனைத்துக் காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் புகழ், அந்தஸ்து, கௌரவம் கூடும். பணவரவு அதிகரிக்கும். பிறர் உதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடன் நடப்பீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் நன்மைகளை அடைவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்கு நட்பு வட்டாரம் விரிவடையும். மாணவர்களுக்கு நண்பர்கள் உதவிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரம் உயர்வடையும். அறிவு, ஆற்றலும் வெளிப்படும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தொழிலை மேம்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கடந்த கால கசப்புகள் மறையும். கலைத் துறையினர் ரசிகர்களுக்கு உதவுவீர்கள். பெண்களுக்குப் பணப்புழக்கம் இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

அருள் தரும் தட்சிணாமூர்த்தி

சிவனின் 25 திருமேனிகளில் ஒன்பதாவதாக இடம்பெறுபவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. நட்சத்திரங்கள் 27 என்பதற்கேற்ப கருவறைக் கோயில் தரையில் இருந்து, உச்சிக்கோபுரக் கலசத்தின் உயரம் 27 அடியாகும். 9 கிரகங்களுக்கு அதிபத... மேலும் பார்க்க

கேட்டது கிடைக்கும்...

போர்க் களத்தில் தனக்கு உதவி புரிந்த கைகேயிக்கு இரு வரங்கள் தருவதாக தசரதன் அளித்த வாக்குறுதியால், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். சீதையும், லட்சுமணனும் உடன் சென்றனர். ராமரின் பாதுகைகளை சிம்மாசனத்த... மேலும் பார்க்க

கட்டெறும்பு காட்டிய காசி விசுவநாதர்

தென்பாண்டி நாட்டில் 15}ஆம் நூற்றாண்டில் விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன். வாரணாசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். முருகன் அருளால், அனிமா... மேலும் பார்க்க

சென்னையில் ஐயப்பனின் முதல் கோயில்...

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சென்னையில் உள்ள ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் கோயிலாகும். சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு வழிகாட்ட "ஐயப்ப பக்தர்கள் சபா' 1968 }இல் ... மேலும் பார்க்க

தோஷங்கள் போக்கும் தேவர் மலை

பிரகலாதனுக்கு இடர்களைத் தந்தார் தந்தை இரணியன். ஒருநாள் இரணியன், ""உன் ஹரி எங்கிருக்கிறான்'' எனக் கேட்டு, பதில் இல்லை. ""இந்தத் தூணில் இருக்கின்றானா?'' எனக் கேட்டார் இரணியன். ""தூணிலும் இருப்பான் துரும... மேலும் பார்க்க

திருமணத் தடை நீங்க...

திருவள்ளுர் மாவட்டத்தில் பழைமையான கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் ஊரில் அமைந்துள்ள திருப்பாலீசுவர கோயிலாகும். ஒருமுறை முதலாம் ராஜேந்திர சோழன் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக் கொடி நாட்டி த... மேலும் பார்க்க