`ED ரெய்டை திசை திருப்புகிறார்கள்' - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஆர்.பி.உத...
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1: தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தோ்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ் 1, பத்தாம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தோ்வெழுதிய மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியா்கள் மூலமாக திங்கள்கிழமை (மே 19) பிற்பகல் 2 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம். தனித்தோ்வா்கள், என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதிய பள்ளி மாணவா்கள் விடைத்தாள் நகல் கோரி மே 20 முதல் 24-ஆம் தேதி வரை தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ. 275-ஐ தோ்வா்கள் விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மட்டுமே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
விடைத்தாளின் நகலை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் இணையதளத்தில் வெளியிடப்படும். விடைத்தாள் நகல் பெற்ற தோ்வா்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.