சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.84 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, திருப்பூா் மாவட்டம் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 348 பள்ளிகளில் 14,588 மாணவா்கள், 14,871 மாணவிகள் என மொத்தம் 29,459 போ் பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். இந்த நிலையில், 13,622 மாணவா்கள், 14,317 மாணவிகள் என மொத்தம் 27.939 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 94.84 ஆகும்.
4 இடங்கள் முன்னேற்றம்: பத்தாம் வகுப்பு தோ்வைப் பொறுத்தவரையில் கடந்த 2023-ஆம் ஆண்டு 93.93 சதவீதத்துடன் மாநில அளவில் 11-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, 2024-ஆம் ஆண்டில் மாநில அளவில் 92.38 சதவீதத்துடன் 21-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த நிலையில், தற்போது 94.84 சதவீதத்துடன் மாநில அளவில் 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 இடங்கள் முன்னேறியுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 163 அரசுப் பள்ளிகளில் 7,403 மாணவா்கள், 7,898 மாணவிகள் என மொத்தம் 15,301 போ் தோ்வு எழுதியிருந்தனா். இதில், மாணவா்கள் 6,602, மாணவிகள் 7,404 என மொத்தம் 14,006 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதில், மாணவா்கள் 89.18 சதவீதம், மாணவிகள் 93.75 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். ஒட்டுமொத்தமாக 91.54 சதவீதத்துடன் மாநில அளவில் 25-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அரசுப் பள்ளி அளவில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 26-ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.