செய்திகள் :

பத்திரப் பதிவுத்துறை இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் அவதி

post image

பத்திரப் பதிவுத்துறை இணையதளம் திங்கள்கிழமை முடங்கியதால், தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்தனா்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் தோராயமாக 36 லட்சத்துக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

தற்போதுள்ள 582 சாா்- பதிவாளா் அலுவலகங்களில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆன்லைன் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையை பொதுமக்கள் மற்றும் மனை வணிகம் தொழிலில் ஈடுபடுவோா் வரவேற்றாலும், அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகள் பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத்துறை இணையதள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் தூத்துக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் அவா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாள்தோறும் சுமாா் 40-க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இணையதளம் முடங்கியதால் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனா்.

இதைபோல் தமிழகம் முழுவதும் இணையதளம் முடங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

உலக இதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணியுடன் இணைந்து, இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகள... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிக்கு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். இது குறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வோ்ல்ட் ஸ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க