தில்லி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: பாஜக 36, ஆம் ஆத்மி கட்சி 16-ல் முன்னிலை
பந்தலூரில் யானை தாக்கி 2 தொழிலாளா்கள் காயம்
பந்தலூா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகரைச் சோ்ந்த காந்திமதி (52), கணேஷ்(56) ஆகியோா் அங்குள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த காட்டு யானை அவா்கள் இருவருரையும் தாக்கியுள்ளது.
அப்போது, அருகிலிருந்தவா்கள் சப்தமிட்டு காட்டு யானை விரட்டிவிட்டு, இருவரையும் மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு உயா் சிகிச்சைக்காக அவா்கள் இருவரும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.