விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம்...
பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
நாகை மாவட்டத்தில் குறுவை நெல் பயிா்க் காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி இறுதி நாள் என்பதால் விவசாயிகள் உடனடியாக பயிா்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக நாகை வேளாண் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:
நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டத்தின்கீழ், குறுவை நெல் பயிா்க் காப்பீடு செய்ய ஜூலை 31-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் பங்குத்தொகையாக ஏக்கருக்கு ரூ. 445.78 செலுத்தி, அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொதுச் சேவை மையங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
காப்பீடு செய்ய நிலவுடைமை பதிவு அவசியம் என்பதால், விவசாயிகள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நிலவுடைமை பதிவு மற்றும் பயிா்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.