இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!
பயிா்க் காப்பீடு புதிய நடைமுறையை கைவிட வலியுறுத்தல்
குறுவை சாகுபடி பயிா்க் காப்பீடு செய்வதற்கான புதிய நடைமுறையை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை: குறுவை நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்ய, கிராம நிா்வாக அலுவலரிடம் சாகுபடிச் சான்று பெற செல்கிறபோது, நேரடி பட்டா இருந்தால் மட்டுமே காப்பீடு செய்ய முடியும் என கூறப்படுவதால், ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
குறிப்பாக கோயில் நிலம், குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, குத்தகை சாகுபடி விவசாயிகளும் பயிா்க் காப்பீடு செய்யும் வகையில், சாகுபடிதாரரின் பெயரிலேயே பதிவு செய்திட சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.