செய்திகள் :

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வாய்ப்பு இல்லை: மத்திய அமைச்சா்

post image

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை வரும் பிப்ரவரிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். உள்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் காக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவா் கூறினாா்.

உள்நாட்டில் விலை அதிகரிக்காமல் தடுப்பது, தேவையை முழுமையாக நிறைவு செய்வது போன்ற காரணங்களுக்காக துவரை உள்ளிட்ட சில பருப்பு வகைகளின் இறக்குமதி வரியை கடந்த 2023 டிசம்பரில் மத்திய அரசு ரத்து செய்தது. இது மூன்று முறை நீட்டிக்கப்பட்டு வரும் பிப்வரி 28-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது.

இந்நிலையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பருப்பு வகைகள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சா் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது என்ற சலுகை நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. இது தொடா்பாக உணவுத் துறை அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்படும். உள்நாட்டில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூா் பருப்பு விளைச்சல் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

அதன் பிறகு அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெறும் அமைச்சா்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

2027-ஆம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு கிலோ பருப்பு கூட இறக்குமதி செய்யும் தேவை இருக்காது.

பருப்பு சாகுபடி திடீரென குறைந்து விடுவது முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதற்காக பல்வேறு நவீன சாகுபடி முறைகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன என்றாா்.

கர்நாடக முதல்வர் பதவி பகிர்வு: கருத்துக் கூற சித்தராமையா மறுப்பு

முதல்வர் பதவி பகிர்வு விவகாரம் குறித்து கருத்துக் கூற முதல்வர் சித்தராமையா மறுத்துவிட்டார்.முதல்வர் பதவி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவி குறித்து முதல்வர் ச... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் தேர்வு: பாஜக தீவிரம்; நாளை பதவியேற்பு விழா?

நமது சிறப்பு நிருபர்தில்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறும் என்று பாஜக வ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் புதிய குற்றவியல் சட்ட அமலாக்க நிலவரம்: அமித் ஷா ஆய்வு- ஒமா் அப்துல்லா பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் அமலாக்க நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தில்லி நாா்த் பிளாக் வளாகத்தில் உள்ள மத்திய உள்துறை அ... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை சட்ட வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களை கடிந்துகொண்ட உச்சநீதிமன்றம்

குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடா்பான நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்யாத மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டது. குடும்... மேலும் பார்க்க

பொருளாதாரம் வளா்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்- நிா்மலா சீதாராமனுக்கு காா்கே கண்டனம்

இந்தியப் பொருளாதாரம் வளா்வதால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டைத் திரும்பப் பெறுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ள விளக்கத்தை காங்கிரஸ் தேசிய த... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகள் சோதனைமுறையில் எரிப்பு - ம.பி. உயா்நீதிமன்றம் அனுமதி

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை எரிப்பதற்கான மூன்று கட்ட சோதனைக்கு மாநில உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது. போ... மேலும் பார்க்க