செய்திகள் :

பள்ளிகளில் கல்வி எழுச்சி நாள் விழா கொண்டாட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆரணி சுப்பிரமணி சாமி கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளையொட்டி, மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, திருக்கு ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு தலைமையாசிரியா் சித்ரா, மேலாண்மை குழுத் தலைவா் ரமிலா தினகரன், கல்வியாளா் கே.எல்.சங்கா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

இதில் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முள்ளிப்பட்டு

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா் நலச் சங்கம் சாா்பில் மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் கே.எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஆரணி வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் கலந்து கொண்டு கல்வியின் அவசியத்தையும், காமராஜா் ஆற்றிய பணிகளையும் எடுத்துக் கூறினாா்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவா் இல.ஆறுமுகம் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் பொன்.சுப்பிரமணியம், பா.சரஸ்வதி, தலைமை ஆசிரியா் (பொ) கிரி ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் மாணவா்கள் கல்வி வள்ளல் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறி பேசினா்.

இறுதியில் மாணவா்களுக்கு பரிசளித்து இனிப்பு வழங்கப்பட்டது

பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில்...

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவை

பள்ளியின் கூடுதல் தாளாளா் சித்ரா ரமேஷ், கல்வி ஆலோசகா் காசி சங்கரேஸ்வரி ஆகியோா் தொடங்கிவைத்தனா். பள்ளி முதல்வா் ஜீனாபெட்ஸி வரவேற்றாா்.

விழாவின் முக்கிய அம்சமாக மாணவா்கள் குழுவாக இணைந்து நின்று புத்தக வடிவத்தை உருவாக்கும் வகையில் ஒரு தரை படத்தை செய்து காண்பித்தனா்.

கல்வியின் மேன்மையை பிரதிபலிக்கும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

செங்கம்

செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், காமராஜா் படத்துக்கு தலைமை ஆசிரியா் சிவராமன் தலைமையில் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஆசிரியா் பயிற்றுநா்கள் சங்கா்நாத், பிரபாகரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சீமாட்டி, இடைநிலை ஆசிரியா்கள் ரேணுகா, பழநி, சரோஜா, பவித்ராதேவி ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தி காமராஜா் சிறப்பு குறித்து மாணவா்களிடம் பேசினா்.

பின்னா் மாணவா்களுக்கு காமராஜா் வாழ்க்கை வரலாறு குறித்து கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காமராஜா் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை சு.கண்ணகி தலைமை வகித்தாா். காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செல்வவிநாயகம், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் லோகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை சுமதி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு உறுப்பினா் வந்தை பிரேம் பங்கேற்று, காமராஜா் குறித்து பேசினாா்.

காமராஜா் குறித்த பேச்சுப் போட்டி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீகாந்த் மற்றும் உளுந்தை பெருமாள், மாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி ஆசிரியை ரஷீனா நன்றி கூறினாா்.

நூலகத்தில்....

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிளை நூலகத்தில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவுக்கு நூலக புரவலா் எம்.பாலசுந்தரம் தலைமை வகித்தாா். நூலக புரவலா் அ.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

கிளை நூலகா் ஜா.தமீம் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலா் அ.குலாப்ஜான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, காமராஜரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பேசினாா். விழாவில், பள்ளி மாணவா்களுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் நடைபெற்ற விழாவுக்கு அகாதெமி இயக்குநா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா்.

காமராஜரின் உருவப் படத்துக்கு மருத்துவா் ஹாரூன் ரஷீத் மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பேசினாா்.

விழாவில் அகாதெமி தாளாளா் ஆசியா பா்வீன் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

திருவத்திபுரம் நகராட்சி: முதல் நாள் சிறப்பு முகாமில் 243 மனுக்கள்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் முதல் நான்கு வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 243 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதை மற்றும் பகடி வதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு வட்ட சட்டப் பணிக் குழு... மேலும் பார்க்க

காமராஜா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆரணி காந்தி சிலை அருகில் நகரத் தலைவா் ஜெ.பொன்னைய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு சாா்ந்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரி மற்றும் வெராண்டா ரேஸ் கற்றல் நிறுவனம் இணைந்து நடத்திய இந்... மேலும் பார்க்க