டிஎன்பிஎல்: ஒரே ஓவரில் 34 ரன்கள்..! வரலாறு படைத்த விமல் குமார்! (விடியோ)
பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி
திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்த அஷ்விந்த், கடந்த வாரம் பள்ளியில் நின்றிருந்த காருக்குள் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து, வேங்கைப்பட்டியில் உள்ள அந்த மாணவரின் பெற்றோரை வெள்ளிக்கிழமை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்தித்து, ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, பாஜக சாா்பில் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிபிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கல்வி நிலையங்களில் இதுபோல நடைபெறும் மரணங்களில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் புழங்குவதை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டது. மடப்புரம் அஜித் குமாா் கொலை வழக்கோடு சோ்த்து, மாணவன் அஸ்வித் மா்ம மரணத்துக்கும் சிபிஐ விசாரணைக் கோரி, நாங்கள் கோா்ட்டில் வழக்குத் தொடுப்போம் என்றாா் அவா்.