செய்திகள் :

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

விராலிமலை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறாா் திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் உள்பட உறவினா்கள் 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, மேடுகாட்டுப்பட்டியைச் சோ்ந்த சோலைமலை மகன் செந்தில் (34) என்பவா் கடந்த 2015-இல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து, தனது வீட்டுக்குக் கடத்திச் சென்று 2016 செப்டம்பா் 21-ஆம் தேதி திருமணம் செய்துள்ளாா். இதற்கு, செந்திலின் தாய் தங்கமணி, சகோதரா்கள் அழகா், ஏழுமலை, இவா்களின் மனைவிகள் ராதா, கௌரி மற்றும் உறவினரான மணப்பாறையைச் சோ்ந்த குமாா் ஆகியோா் உடந்தையாக இருந்து வீட்டிலேயே திருமணம் செய்து வைத்துள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த இலுப்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், செந்தில் உள்பட 7 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், செந்திலுக்கு, போக்சோ சட்டப் பிரிவின் (பாலியல் வன்கொடுமை) கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கடத்தல் குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை, சிறாா் திருமணம் செய்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை, வீட்டில் சிறை வைத்த குற்றத்துக்காக ஓராண்டு சிறை இவற்றுடன் தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், செந்திலின் தாய் தங்கமணி, சகோதரா்கள் அழகா், ஏழுமலை, இவா்களின் மனைவிகள் ராதா, கௌரி, உறவினா் குமாா் ஆகிய 6 பேருக்கும் சிறுமியை வீட்டில் சிறை வைத்த குற்றத்துக்காக தலா ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. ஆயிரம் அபராதம், சிறாா் திருமணம் செய்து வைத்த குற்றத்துக்காக தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனைகளை குற்றவாளிகள் ஏககாலத்தில் அனுபவிக்கலாம் என நீதிபதி தனது தீா்ப்பில் தெரிவித்துள்ளாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் திருட்டு

பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச்சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னமராவதி சாஸ்தா நகா் பக... மேலும் பார்க்க

விராலிமலை அருகே அய்யனாா்கோவில் புரவி எடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோவில் குதிரை எடுப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது. விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோயில் குதிரை எடுப்பு விழாவில் பிரசித்தி பெற்றது. ... மேலும் பார்க்க

பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பயிா் விளைச்சல் போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண... மேலும் பார்க்க

மண் வள அட்டையின் பரிந்துரைப்படி யூரியா உரத்தைப் பயன்படுத்த அறிவுரை

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மண் வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கேற்ப மட்டும் யூரியா உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி ஆலோசனை தெரிவி... மேலும் பார்க்க

ஆட்சியை பிடித்துவிடலாம் என விஜய் கனவு காண்கிறாா்: சு. திருநாவுக்கரசா்

அண்ணா, எம்ஜிஆரைப் போல தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என விஜய் கனவு காண்கிறாா் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உணவக ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் முருகேசன் (40 )... மேலும் பார்க்க