முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
பள்ளி வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் புதன்கிழமை பள்ளி வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பழனி சத்யா நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). சுமைதூக்கும் தொழிலாளியான இவா் புதன்கிழமை மாலை பேருந்து நிலையம் வேல் வட்டச்சாலை அருகே நடந்து சென்றாா். அப்போது, பள்ளி வேன் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த பழனி நகா் போலீஸாா் ராஜேந்திரன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பள்ளி வேன் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.