வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-ல் தொடா் முழக்கப் போராட்டம்
பழனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அனுப்பப்பட்ட 20 டன்னில் தயாரான கருப்பண்ணசாமி சிலை
பழனியில் தனியாா் சிற்பக் கலைக் கூடத்தில் தயாரான 20 டன் எடையிலான கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சிலைகள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திண்டுக்கலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
திண்டுக்கல் நல்லாம்பட்டியில் அமைந்துள்ளது மாசிமலையாள கருப்பண்ணசாமி கோயிலில் வருகிற நவ. 14-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி கோயிலில் உள்ள கான்கிரீட்டிலான கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சிலைகளுக்கு பதிலாக முற்றிலும் கருங்கல்லால் செய்யப்பட்ட சிலையை நிறுவ கோயில் நிா்வாகக் குழுவினா் முடிவு செய்து பழனியில் உள்ள மாசிமலை சிற்பக் கலைக் கூடத்தில் அந்தச் சிலைகளை செய்து தர கேட்டுக் கொண்டனா். இதற்காக திருச்சியிலிருந்து 20 டன் எடையில் கல் கொண்டு வரப்பட்டு சுமாா் 9 அடி உயரத்தில் சிலைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது கிடாய் வெட்டி பூஜை செய்து சிலைகள் கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டு நல்லாம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து சிற்பக் கலைக் கூட உரிமையாளா் நாகராஜன் கூறியதாவது: குதிரையில் அரிவாளுடன் காணப்படும் கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சிலைகளுக்கு 20 டன் எடையில் கற்கள் கொண்டு வரப்பட்டு ஆறு மாதமாக 9 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டன. இந்த இரு சிலைகளுக்கும் ஆடைகள், ஆபரணங்கள், வாகனங்கள், பூதம் என பல்வேறு வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலைகள் மட்டுமன்றி துணைக் கோயில்களுக்கான சிலைகளும் தயாரித்து கொடுக்கப்பட்டது என்றாா் அவா்.
கோயில் குழு நிா்வாகி சரவணன் கூறியதாவது:
நல்லாம்பாளையத்தில் அமைந்துள்ள கோயிலில் தமிழகத்தில் எங்கும் இல்லாத சிறப்பம்சமாக நவக்கிரகங்கள் அம்சமும் உள்ளன. அதே போல, 9 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சிலைகள் தமிழகத்தில் எங்கும் இல்லை என்றாா் அவா்.