செய்திகள் :

பழைய நாணயம், சாக்குமூட்டையில் ரூ.2 கோடி: பணத்தாசை காட்டி மோசடி செய்ததால் 65 வயது முதியவர் தற்கொலை

post image

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்குள்ள ரேவா என்ற இடத்தை சேர்ந்தவர் மனோஜ் துபே(65). செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த ஒன்றாம் தேதி மர்ம நபர் போன் செய்து தான் இந்தியன் ஓல்டு கம்பெனியில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். மேலும் பழைய நாணயங்களை அரசாங்கம் விலைக்கு வாங்குவதாக தெரிவித்தார். துபே தன்னிடம் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இருப்பதாக தெரிவித்தார். உடனே அவற்றை போட்டோ எடுத்து அனுப்பும்படி கூறினார்.

பணம்
பணம்

துபேயும் அவ்வாறு செய்தார். அதனை பார்த்துவிட்டு இதற்கு ₹65 லட்சம் கிடைக்கும் என்று மர்ம நபர் தெரிவித்தார். அதோடு முதல் கட்டமாக ₹.520 அனுப்பும்படி துபேயிடம் மர்ம நபர் கேட்டுக்கொண்டார். துபேயும் அவ்வாறு அனுப்பினார். அதன் பிறகு மர்ம நபர் துபேயிக்கு அடுக்கடுக்காக வாட்ஸ் ஆப் மெசேஜ் செய்து கொண்டிருந்தார். பணம் இருக்கும் சாக்குமூட்டைகளையும் வீடியோவாக அனுப்பினர். அந்த பணமூட்டைகள் உங்களுக்கு டெலிவரி செய்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறது என்று கூறி வீடியோ அனுப்பினர்.அதோடு வரி மற்றும் ஜி.எஸ்.டி செலுத்திய பிறகு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே துபே தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.37 ஆயிரத்தை மர்ம நபர்களுக்கு அனுப்பி வைத்தார். செக்யூரிட்டி தொகையாக மேலும் ₹.10 ஆயிரம் அனுப்பும்படி மர்ம நபர்கள் கேட்டனர். ஆனால் அப்பணம் துபேயிடம் இல்லை.

இதனால் ஏற்கனவே கொடுத்த பணமும் கிடைக்காமல் போய்விடும் என்று மர்ம நபர்கள் தெரிவித்தனர். எனவே துபே தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டார். ஆனால் யாரும் பணம் கொடுக்கவில்லை. அவரது மனைவி தனது குடும்ப உறுப்பினர்களிடம் தனது கணவர் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். மர்ம நபர்கள் ஒரு கட்டத்தில் ரூ.2 கோடி வரை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர். அதோடு பணம் இருந்த பேக்கை வீடியோ எடுத்து துபேயிக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.

இதனால் 2 கோடி ரூபாய் கிடைக்க இருப்பதை குடும்பத்தினர் நம்ப மறுக்கிறார்களே என்று துபே கவலை அடைந்தார். அவரது மகள், மருமகன் கூட பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் யாரிடமும் பேசாமல் தனியாக தன்னை தனி அறையில் அடைத்துக்கொண்டார். அந்த அறையில் துப்பாக்கி ஒன்று இருந்தது. அதனை எடுத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து துபே மனைவி நிர்மலா கூறுகையில்,'' எனது கணவர் இறந்த பிறகும் மர்ம நபர்கள் போன் செய்தனர். பணத்துடன் வீட்டிற்கு வெளியில் ஆள் நிற்பதாக தெரிவித்தனர். நான் வெளியில் சென்று பார்த்தபோது யாரும் இல்லை'' என்றார். கடந்த ஆண்டும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் இதேபோன்று தற்கொலை செய்து கொண்டார். மத்திய அரசு இதுபோன்ற குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறது

தஞ்சாவூர்: ”கடை வாடகை பணம் பிரிப்பதில் தகராறு”- தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன் கைது!

தஞ்சாவூர், கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் (வயது 46), திருவேங்கடம் (41). இருவரும் சகோதரர்கள். திருமணம் ஆன அறிவழகன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருவேங்கடத்திற்கு திருமணம் ஆகவில்லை. சகோதரர... மேலும் பார்க்க

பதின்பருவ மாணவர் மர்ம மரணம்; தன்பாலின உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? - இளைஞரிடம் போலீஸார் விசாரணை

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர். அந்த மாணவர், அ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் நெருக்கம்; ஹோட்டலுக்கு சென்ற இளைஞரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. 21 பேர் கைது!

டேட்டிங் செயலி மூலம் ஆண், பெண் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். இந்த நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. இந்த டேட்டிங் ஆப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்... மேலும் பார்க்க

`அன்று அதை விரும்பவில்லை, கட்டாயபடுத்தி உறவுகொண்டதால்...' - புனே பாலியல் புகாரில் திருப்பம்

புனே கொண்ட்வா பகுதியில் கடந்த வாரம், புதன்கிழமை கூரியர் கொண்டு வந்த நபர் தனியாக இருந்த 22 வயது பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார்... மேலும் பார்க்க

கரூர்: வழக்கறிஞரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி கைது; மா.செ காட்டம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிரிப்ஸ்சன் என்பவர் கரூர் கோதூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜா என்ற நில தரகரிடம் முன்பணமாக, ரூ.96 லட்சம் கொடுத்து... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் ... மேலும் பார்க்க