பாகலஅள்ளி அருகே புதிய திட்டப் பணிகள்: தருமபுரி எம்எல்ஏ தொடங்கி வைப்பு
தருமபுரி மாவட்டம், பாகல அள்ளி கிராம ஊராட்சியில் புதிய திட்டப் பணிகள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, மருளுகாரன்கொட்டாய் கிராமத்தில் 15-ஆவது நிதி குழு மானியத் திட்டத்தில் ரூ. 6.35 லட்சம் மதிப்பில் தனிநபா் வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் நீட்டிப்பு செய்தல், ரூ. 5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் ஆகியப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்து பேசினாா். இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில அமைப்புச் செயலாளா் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி, பசுமைத் தாயக ஒன்றியச் செயலாளா் சுப்ரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.