செய்திகள் :

பாகிஸ்தன் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்!

post image

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லக்னெள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஷஷாத் என்பவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் நேற்று (மே 18) கைது செய்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாகவும் பயங்கரவாத தடுப்பு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ஷஷாத் என்பவரை மொராதாபாத் அருகே கைது செய்தனர். இவர் ராம்பூர் மாவட்டத்தின் டன்டா என்ற பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு அவர் உளவு பார்த்தது தெரியவந்தது.

நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களையும் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் திரட்டினர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கமாக இந்தியாவில் உள்ள ஆடைகள், அலங்காரப் பொருள்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை இந்திய எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், பாகிஸ்தானில் வணிகம் செய்வதைப் போன்றே ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.

மேலும், இந்தியாவில் உள்ள மற்ற உளவாளிகளுக்கு ஐஎஸ்ஐ உத்தரவின்பேரில் பணத்தையும் கொடுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி, உளவு பார்ப்பதற்காக இந்தியாவில் சிலரை பணம் கொடுத்து அழைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்லைத்தாண்டி பொருள்களைக் கொண்டுசெல்வது ஆபத்தானது என மிரட்டி, ஐஎஸ்ஐ அமைப்பினர் இதற்கு உதவுவதாகக்கூறி, உளவு பார்க்க சிலரை தயார்படுத்தியதும் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானுக்குத் தேவையான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் யூடியூபர் ஜோதி ராணி என்பவரை ஹரியாணா காவல் துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவா்கள் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், பணிஓய்வுக்குப் பிந்தைய அனைத்து சலுகைகள... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது

தாஹோத்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் நடந்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில அமைச்சா் பச்சுபாய் காபாத்தின் இளைய மகன் கிரண் உள்பட 4 போ் காவல் துறையால் திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: எஸ்ஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடா்பாக 3 போ் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிம... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழு: ‘மம்தா கட்டாயத்தால் யூசுப் பதான் தோ்வு’

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பி.க்கள் குழுவில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் கட்டாயத்தின் ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாப்பதில் இந்திரா காந்தியைப் போல் இருக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானுக்கு எதிரான போரிலும், வங்கதேசம் உருவானதிலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பங்கு மறக்கமுடியாதது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இந்திரா சோலார் கிரி ஜல விகாசம் திட... மேலும் பார்க்க