செய்திகள் :

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடம்மாற்றம்!

post image

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், பஞ்சாப் மாகாணத்திலுள்ள மண்டி பஹாவுத்தீன் மாவட்டத்தின் சிறையில், வெள்ளம் ஏற்பட்டு குறைந்தது 5 அடி உயரத்துக்கு வெள்ள நீர் சூழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபாயாகரமான குற்றவாளிகள் உள்பட 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை, மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி, ஹஃபிசாபாத் மாவட்ட சிறைக்கு இடம்மாற்றியுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைகளின்போது எந்தவொரு கைதியும் தப்பிக்க முயற்சிக்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் பெய்யும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் மண்டி பஹாவுத்தீன் உள்பட ஏராளமான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளினால், சுமார் 170 பேர் பலியாகியுள்ளனர். இதில், பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 109 பேர் பலியாகியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கத்தார் உதவியுடன்... 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

Heavy rains in Pakistan have caused flooding in a prison in the country's Punjab province, forcing the evacuation of more than 700 prisoners.

‘காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்’

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அங்குள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக் கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு வெடிவைத்து தகா்த்து வருவதாக, அண்மைக் கால செயற்கைக்கோள் படங்களை மேற்கோள... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா தடை

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பை சா்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ல... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பருவ மழை: 700 கைதிகள் இடமாற்றம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக, மண்டி புஹாதின் மாவட்ட சிறைச் சாலையில் இருந்து சுமாா் 700 கைதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப... மேலும் பார்க்க

கத்தார் உதவியுடன்... 81 ஆப்கன் மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி மீண்டும் அமைந்தது முதல், 2-வது முறையாக, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆப்கன் மக்கள், தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.ஜெர்மனியில் புகலிடம் தேடி தஞ்சமடைந்த 81 ஆப... மேலும் பார்க்க

தென் கொரியாவில் கனமழையால் வெள்ளம்! 4 பேர் பலி.. 5,600 பேர் வெளியேற்றம்!

தென் கொரியா நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், 2 பேர் பலியாகியதுடன், சுமார் 5,600 பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தென் கொரியாவில், தெற்கு சங்சியோங் மாகாணம் மற்று... மேலும் பார்க்க